நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்திய ரூபாயின் மதிப்பு 100 எட்டவிடக்கூடாது: பிரதமருக்கு காங்கிரஸ் கோரிக்கை

புது டெல்லி:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சதமடித்துவிடாமல் தடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து இதுவரை இல்லாத அளவில் ரூ.81.90 ஆக வீழ்ச்சியடைந்தது. மேலும் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாத் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் மோடியின் ஆசியுடன் வரலாற்றிலேயே முதல்முறையாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாயை நோக்கி வேகமாக பயணிக்கிறது.

ரூபாயின் மதிப்பு, நாட்டின் பிரதமர் மீதான நம்பகத்தன்மையுடன் தொடர்புடையது என்று தான் ஆட்சிக்கு வரும் முன் மோடி தெரிவித்திருந்தார். இன்று தன் மீதான நம்பகத் தன்மை அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டதை அவர் உணர வேண்டும்.

சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு, கடந்த 2021, செப்டம்பரில் ரூ.73ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இப்போது ரூ.81.90 ஆகிவிட்டது. பிரதமர் மோடியின் புகழ் 12 மாதங்களில் 12 சதவீதம் சரிவடைந்துள்ளது.

மோடி பதவியேற்கும்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.62ஆக இருந்தது. அவரது ஆட்சிக்காலத்தில் 41.5 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த மாதம் 571 பில்லியன் டாலர்களாக இருந்தது. இப்போது 545 பில்லியன் டாலர்களாக குறைந்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset