நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகை ஆஷா பரேக்குக்கு தாதா சாகேப் பால்கே விருது

புது டெல்லி:

இந்திய திரைத் துறைக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, நடிகை ஆஷா பரேக்குக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

தில்லியில் வரும் வெள்ளிக்கிழமை ஆஷாவுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.

திரையுலக பிரபலங்களான ஆஷா போஸ்லே, ஹேமமாலினி, பூனம் தில்லான், உதித் நாராயண், டி.எஸ்.நாகாபரணா ஆகியோர் அடங்கிய 5 உறுப்பினர்கள் குழு, தாதா சாகேப் பால்கே விருதுக்கு ஆஷா பரேக் பெயரை முடிவை செய்தது; முதுபெரும் நடிகையான அவருக்கு இவ்விருது வழங்கப்படுவதை செய்தி மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பெருமையாகக் கருதுகிறது என்றார் அமைச்சர் அனுராக் தாக்குர்.

ஹிந்தி திரையுலகில் செல்வாக்குமிக்க நடிகைகளில் ஒருவரான ஆஷா பரேக், கடந்த 1952இல் தனது 10 வயதில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பயணத்தை தொடங்கினார்.

பின்னர், 1959இல் "தில் தேகே தேகோ' ஹிந்தி படத்தில் ஷம்மி கபூருக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு, "கேரவன்', "பியார் கா மௌசம்', "தீஸ்ரி மன்ஸில்' உள்பட 95க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, 50 ஆண்டுகளாக முக்கிய நடிகையாக வலம் வந்தார். அத்துடன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராகவும் தடம்பதித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset