நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிரெய்லர் லோரி கவிழ்ந்தது: போக்குவரத்து நிலை குத்தியது

சிரம்பான்:

டிரெய்லர் லோரி கவிழ்ந்ததில் அதில் இருந்த டீசல் சாலை முழுவதும் கசிந்தது. இதனால் அப் பகுதியில் போக்குவரத்து நிலைக் குத்தியது.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 6.40 மணியளவில் சிரம்பான் டோல் சாவடிக்கு அருகே நிகழ்ந்தது.

டிரெய்லர் லோரிக்கும் பெரூடுவா அக்சியா காருக்கும் இடையே விபத்து ஏற்பட்டது.

இதில் டிரெய்லர் லோரி சாலையின் நடுவே தடம் புரண்டது.

அதே வேளையில் அக்கார் இடுபாடுகளில் சிக்கி நசுங்கியது.

ஆனால் அக் காரை செலுத்தி வந்த 31 வயது பெண் ஓட்டுநர் எந்தவொரு பாதிப்பும் இன்றி உயிர் தப்பினார்.

மேலும் 51 வயதுடைய லோரி ஓட்டுநர் அதில் சிக்கிக் கொண்டார். பின் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

லோரி கவிழ்ந்ததால் அதில் இருந்த டீசல் சாலையில் கசிந்தது.

இதனால் அச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது என்று சிரம்பான் மாவட்ட போலீஸ்படைத் தலைவர் நன்டா மாரோவ் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset