நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழிலாளர்கள் வரும் போது விமான நிலையத்தில்  முதலாளிகள் கட்டாயம் இருக்க வேண்டும்

கோலாலம்பூர்:

அந்நியத் தொழிலாளர்கள் இந்நாட்டிற்கு வரும் போது விமான நிலையத்தில் இருந்தே அவர்களை நிறுவன முதலாளிகள் அழைத்துக் கொள்ள வேண்டும். அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் வேண்டும் என்று விண்ணப்பித்திருந்த முதலாளிமார்கள் கட்டாயம் விமான நிலையம் வந்து இருக்க வேண்டும் என்று குடிநுழைவு இலாகாவின் தலைமை இயக்குநர் கைரூல் ட்சைமி  தாவுத் கூறினார்.

சம்மந்தப்பட்ட தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட முதலாளிமார்களை கொண்டிருப்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குனர் சுட்டிக் காட்டினார். 

அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தற்போது கட்டம் கட்டமாக தீர்வு காணப்பட்டு வருகிறது.

இதனால், அந்நியத் தொழிலாளர்கள் தற்போது மலேசியாவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அத் தொழிலாளர்கள் இங்கு வரும் போது அவர்கள் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களின் முதலாளிமார்களும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் குடிநுழைவுத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

அதன் அடிப்படையில் அவர்கள் கட்டாயம் விமான நிலையத்திற்கு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset