நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இளவரசர் முஹம்மது பின் சல்மான் சவுதி பிரதமராக நியமனம் 

ஜித்தா:

சவுதி அரேபியாவின் பட்டது இளவரசர் முஹம்மது பின் சல்மான் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ், தனது மகனும் பட்டத்து இளவரசருமான முஹம்மது பின் சல்மானை நாட்டின்  பிரதமராகவும், அவரது இரண்டாவது மகன் இளவரசர் காலித்தை பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்துள்ளதாக சவூதிஅரச ஆணை  தெரிவித்துள்ளது.

மன்னரின் மற்றொரு மகனான இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மானை எரிசக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், நிதி அமைச்சர் முஹம்மது அல் ஜடான், முதலீட்டு அமைச்சர் காலித் அல் ஃபாலிஹ் ஆகியோர் அதே துறையை நிர்வகிப்பார்கள்.

இளவரசர் முஹம்மது பின் சல்மான் பாதுகாப்பு அமைச்சராகவும், பட்டத்து இளவரசரின் இளைய சகோதரர் இளவரசர் காலித் பின் சல்மான் முன்பு துணை பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்ற்றுவார்.

அவர் பங்கேற்கும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு மன்னர் சல்மான் தலைமை தாங்குவார் என்று ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

86 வயதான மன்னர் சல்மான் 2015 இல் நாட்டின் ஆட்சியாளரானார்.

இளவரசர் முஹம்மது 2017 முதல் சவுதி அரேபியாவை தீவிரமாக மாற்றியுள்ளார், ஏனெனில், அவர் பெட்ரோல் சார்ந்து இருந்து பொருளாதாரத்தை வேறுபடுத்துவதற்கான முயற்சிகளை வழிநடத்தினார். 

அவர் வாகனம் ஓட்ட பெண்களுக்கு அனுமதி வழங்கினார். சமூகத்தின் மீது பழமைவாதிகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்தினார்.

சவுதி அரேபியாவின் பிரதமராக நியமிக்கப்பட்ட பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மானின் நியமனத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முஹம்மது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ரஷித் அல் மக்தூம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset