நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கம் காலம் தாழ்த்திவிட்டது: டான்ஸ்ரீ மொஹைதின் யாசின்

கோலாலம்பூர்:

தேசிய மீட்பு மன்றம் பொருளாதார மீட்சிக்காக முன்வைத்த பரிந்துரைகளை ஏற்றுச் செயல்படுத்துவதில் அரசாங்கம் காலம் தாழ்த்திவிட்டதாக அம்மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவே தேசிய மீட்பு மன்றம் உருவாக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கெனவே இம்மன்றம் 95 பரிந்துரைகளை அரசாங்கத்துக்கு அளித்ததாக கூறியுள்ளார்.

"அந்தப் பரிந்துரைகள் குறித்து கடந்த மே 12ஆம் தேதி ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையின் மூலம் கேள்வி எழுப்பி இருந்தேன். அதற்குப் பதிலளித்த பிரதமர் உரிய அமைச்சர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவு எடுப்பதாகக் கூறியிருந்தார்.

"ஆனால், நான்கு மாதங்களுக்கு முன்பே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். அதனால் பிரதமரின் அறிவிப்பு எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.

"இவ்விவகாரத்தில் செய்யப்படும் தாமதம் என்பது ஏற்க இயலாத ஒன்று," என்று மொஹைதின் யாசின் தெரிவித்துள்ளார்.

தேசிய மீட்பு மன்றம் சார்பில் இதுவரை அரசாங்கத்திடம் 95 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளது என்றும், அவற்றுள் 69 பரிந்துரைகள் சமூக, பொருளாதார விவகாரங்கள் தொடர்பானவை என்றும் குறிப்பிட்ட அவர் 86 பரிந்துரைகளுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துவிட்ட போதிலும், அவற்றுள் 16 பரிந்துரைகள் மட்டுமே முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் 30 பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.

"நான் யாரையும் குறிப்பிட்டுக் குற்றம் சொல்ல விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை நாடு நல்ல நிலையில் இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்று டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset