நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சொகுசு விடுதி பெண் வரவேற்பாளர் கொலை: பாஜக மூத்த தலைவரின் மகன் கைது

டேராடூன்:

உத்தரகண்டில் விருந்தினர்களுக்கு சிறப்பு சேவை செய்ய மறுத்த தனியார் சொகுசு விடுதியின் 19 வயது பெண் வரவேற்பாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த சொகுசு விடுதியின் உரிமையாளரான பாஜக மூத்த தலைவரின் மகன் உள்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து உத்தரகண்ட் காவல்துறைத் தலைவர் அசோக் குமார் கூறுகையில், பெண் வரவேற்பாளர் சொகுசு விடுதிக்கு கடந்த 18ஆம் தேதி வந்த விருந்தினர்களுக்கு பாலியல்  சேவை பாலியல் செய்ய மறுத்ததால், அந்த விடுதியின் உரிமையாளர் மற்றும் இரண்டு ஊழியர்களால் கொலை செய்யப்பட்டது முகநூல் நண்பர் ஒருவருடன் அந்தப் பெண் வரவேற்பாளர் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக மேற்கொண்ட உரையாடல் மூலமாக தெரியவந்தது.

Ankita Bhandari murder: Resort owned by ex-BJP minister's son Pulkit Arya  razed on orders of CM Dhami

கொலை செய்யப்பட்ட 19 வயது பெண்ணின் உடல் சொகுசு விடுத்திக்கு அருகிலுள்ள ஓடையிலிருந்து சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது என்றார்.

இந்த சொகுசு விடுதி ஹரித்வார் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான வினோத் ஆர்யா என்பவரின் மகன் புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானதாகும். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புல்கித் ஆர்யா மற்றும் விடுதியின் மேலாளர், உதவி மேலாளர் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். கைதானவர்கள் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சீலா ஓடையை பார்வையிடவந்த யம்கேஷ்வர் பாஜக எம்எல்ஏ ரேணு பிஷ்ட் வாகனத்தின் மீதும், அங்கு கூடியிருந்த மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

அந்த சொகுசு விடுதி சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதிகாரிகள் அதன் பல்வேறு பகுதிகளை வெள்ளிக்கிழமை இரவு இடித்தனர்.

காவல் துறை டிஐஜி பி.ரேணுகா தேவி தலைமையில் எஸ்ஐடி விசாரணைக்கு  உத்தரவிட்டார்.
.....

தொடர்புடைய செய்திகள்

+ - reset