நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ரசிகர்களைக் கவர்ந்த "எல்லாம் இன்பமயம்": கர்நாடக இசை நிகழ்ச்சி 

ஈப்போ:

நவீன இசைகள் நாளுக்கு நாள்  எவ்வளவு வளர்ந்தாலும் ஆதிக்கும் அந்தத்திற்கும் முடிச்சு போட்டு நம்மை அனைவரையும் இறையருளோடு இணைப்பது கர்நாடக இசை தான். அந்த வகையில் அண்மையில் ராயன் கலாச்சார மண்டத்தில் ஈப்போ சப்தஸ்வர சங்கீதாலயா ஏற்பாட்டில் நடைபெற்ற எல்லாம் இன்பமயம் எனும் நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சப்தஸ்வர சங்கீதாலயா இசை கல்லூரியின் நிறுவனர், ஸ்ரீமதி யமுனா ஆறுமுகம் இந்த நிகழ்ச்சியில் அருமையாக படைப்பினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் இசைக் கல்லூரி மாணவர்கள் பாடல் கீர்த்தனைகளை மிகவும் அழகாக படைத்து, கைத்தட்டல்களை பெற்றனர்.

கர்நாடக இசை நிகழ்ச்சிகளை காண விரும்பிய அனைவருக்கும் இந்த நிகழ்ச்சி மன நிறைவை வழங்கியது.

நிகழ்ச்சியில் ஈப்போ பைன் ஆர்ட்ஸ் தலைவர், சாந்தி லிங்கம், பேராசிரியர் டாக்டர் எஸ்.வெங்கடேஸ்வரா ஐயர், டத்தோ சுசிலா மேனன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஸ்ரீமதி யமுனா நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset