நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

'ஆஹா' செயலியை டத்தோஸ்ரீ சரவணன் துவக்கி வைத்தார்

கோலாலம்பூர்:

தமிழகத்தின் 'ஆஹா' பொழுதுபோக்குச் செயலி இப்போது மலேசியாவில் முதன்முறையாக  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனை மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணனும் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்து இன்று அறிமுகம் செய்தனர்.

தமிழ்ப் பொழுது போக்கு செயலியாக உலகெங்கும் வலம் வர இருக்கும் ஆஹா செயலி முழுவதும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவருவது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக டத்தோஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.

அமேசான், நெட்ஃபிளிக்ஸுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் இதில் நாம் படங்களைப் பார்க்க இயலும். 

தமிழ் நாட்டுக் கலைப் படைப்புக்களோடு மலேசியக் கலைப் படைப்புகளுக்கும் வாய்ப்பளித்து இந்தச் செயலியில் வெளியிடப்படும் என்ற தகவல் இனிப்பானது.

மலேசியக் கலைஞர்களின் படைப்புகளுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை எனும் நிலை மாறி அவர்களின் படைப்புகளும் இதில் வெளியிடப்படும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆஹா செயலி அனைத்து தமிழ்ப் படைப்பாளர்களுக்கும் வாய்ப்பளிக்க முன்வந்திருப்பது தமக்கு மட்டற்ற மகிழ்ச்சியை உண்டாக்குகிறது எனவும் அமைச்சர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset