நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் கட்டடம் கட்டினால் சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 2006 ஆம் ஆண்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (Environmental Impact Assessment Notification)-யின் படி 20000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களின் கட்டுமான பணி துவங்கும் முன்பு சுற்றுச்சூழல் அனுமதி (Environmental Clearance) பெற வேண்டும்.

இதனை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் 20000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் (IT Parks) மற்றும் வணிக வளாகங்கள் உள்பட அனைத்து கட்டுமான உரிமையாளர்களும் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (State Environmental Impact Assessment Authority -SEIAA) யிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset