நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 50 லட்சம் டன் குறையும் என கணிப்பு

புது டெல்லி:

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 40 லட்சம் டன் முதல் 50 லட்சம் டன் அளவுக்கு குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

நொய் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்திருப்பது மற்றும் புழுங்கல் அரிசி தவிர்த்து பிற பாசுமதி அல்லாத அரிசிக்கு ஏற்றுமதி கட்டணம் விதித்தது போன்ற காரணங்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உலகின் மொத்த அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40 சதவீதமாகும். 2021-22 நிதியாண்டில் இந்தியா 2.12 கோடி டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. இது முந்தைய ஆண்டைவிடக் கூடுதலாகும்.

2020-21 ஆம் நிதியாண்டில் இந்தியா 1.77 கோடி டன் அரிசி ஏற்றுமதி செய்தது.

கொரோனா பாதிப்புக்கு முன்பாக 2019-20-ஆம் நிதியாண்டில் 95 லட்சம் டன் அரிசியை மட்டுமே இந்தியா ஏற்றுமதி செய்தது.

நிகழ் நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 93.5 லட்சம் டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset