செய்திகள் கலைகள்
பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்
சென்னை:
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இயக்குநர் பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது வீட்டிற்கே நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "திரைப்பட இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி மு.க.ஸ்டாலின்,இன்று (10.9.2022) நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்தார்.
முன்னதாக இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து முதல்வரின் மனைவி, பாரதிராஜா மனைவியை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார். தற்போது பாரதிராஜா நலம் பெற்று இல்லம் திரும்பியதையடுத்து முதல்வர் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார்.
இச் சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து, பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் இருந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 12:30 pm
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என் தாய் வீடு போன்றது: இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
March 27, 2024, 10:44 am
நகைச்சுவை நடிகர் ‘லொள்ளு சபா’ சேஷு காலமானார்
March 23, 2024, 4:03 pm
தமிழ்நாடும் கேரளாவும் எனக்கு இரு கண்கள் கேரள ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேச்சு
March 23, 2024, 12:06 pm
லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ ஆல்பம் டீசர் வெளியீடு!
March 22, 2024, 11:37 pm
Behindwoods திரைப்பட தயாரிப்பில் களமிறங்குகிறது
March 22, 2024, 4:53 pm
படை தலைவனுக்குப் பக்க பலமாகும் ராகவா லாரன்ஸ்
March 21, 2024, 10:49 am
இளையராஜா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத் துவக்க விழா
March 20, 2024, 4:41 pm
இளையராஜாவின் பயோ பிக் திரைப்படம்; நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்
March 20, 2024, 10:59 am
'அஸ்வத்தாமா தி சாகா கன்டினியூஸ்’ படத்தில் முதன்மை வேடத்தில் ஷாஹித் கபூர்
March 19, 2024, 3:53 pm