நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குஜராத்தில்  போதைப் பொருள் ஆலை கண்டுபிடிப்பு

மும்பை:

குஜராத்தின் அங்களேஸ்வர் பகுதியில், தடை செய்யப்பட்ட "மெஃபிட்ரான்' போதைப் பொருள் தயாரித்து வந்த ஆலையை மும்பை போலீஸார் கண்டறிந்தனர். அங்கிருந்து சுமார் ரூ.1,026 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து, மும்பை போலீஸின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு துணை ஆணையர் தத்தா நலவடே செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மும்பை அருகே நலசோபரா பகுதியில் மெஃபிட்ரான் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஆலை அண்மையில் கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக, 6 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மேலும், ரூ.1,400 கோடி மதிப்பிலான 700 கிலோ மெஃபிட்ரான் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

Mumbai police bust drugs factory in Gujarat, seize Mephedrone worth Rs  1,026 cr

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குஜராத்தின் அங்களேஸ்வர் பகுதியிலுள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் மெஃபிட்ரான் போதைப் பொருள் தயாரிக்கப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து, மும்பை போலீஸின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், அந்த ஆலையில் அதிரடி சோதனை நடத்தி, அதன் உரிமையாளர் கிரிராஜ் தீக்ஷித்தை கைது செய்தனர். மேலும், 513 கிலோ எடையுள்ள ரூ.1,026 கோடி போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset