செய்திகள் வணிகம்
இந்தியாவில் மேலும் 12 நகரங்களில் லூலூ வணிக வளாகங்கள்
புது டெல்லி:
இந்தியாவில் ஏற்கெனவே 5 நகரங்களில் செயல்பட்டு வரும் லூலூ குழுமம், மேலும் 12 நகரங்களில் வணிக வளாகத்தை ஏற்படுத்தி வர்த்தகத்தை விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து லூலூ குழுமத்தின் இந்திய பிரிவு மேலாண் இயக்குநர் ஷிபு பிலிப்ஸ் கூறுகையில்,
முதற்கட்டமாக இந்தியாவில் ரூ.7,000 கோடி முதலீட்டில் 5 வணிக வளாகங்களை லூலூ குழுமம் நிறுவியது.
கடந்த மாதம் ரூ.2,000 கோடி முதலீட்டில், லக்னௌவில் வணிக வளாகம் திறக்கப்பட்டது.
இதேபோல கேரளத்தில் பிரதான மாவட்டங்களில் 5 லட்சம் சதுரஅடி பரப்பளவில் சிறிய வணிக வளாகத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
அந்த வகையில் கோழிக்கோடு, கோட்டயம், திரூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் லூலூ வணிக வளாகம் கட்டப்படும்.
இதுதவிர ஹைதராபாத்தில் வேறொரு நிறுவனத்துக்குச் சொந்தமான பழைய வணிக வளாகத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்புப் பணி முடிந்ததும், லூலூ குழுமத்தின் பெயரில் 2023 முதல் செயல்பாட்டுக்கு வரும்.
சென்னை, அகமதாபாத், பிரயாக்ராஜ், வாராணசி, பெங்களூரு, நொய்டாவில் வணிக வளாகத்தைத் தொடங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையிலும் அகமதாபாத்திலும் 10 லட்சம் சதுரஅடி பரப்பளவில் வணிக வளாகத்தைக் கட்டமைப்பதற்கான நிலத் தேர்வில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டாம் கட்ட முதலீடு குறித்து விரைவில் விரிவாக தெரிவிப்போம் என்றார்.v
தொடர்புடைய செய்திகள்
March 29, 2024, 12:15 pm
தமது 8-ஆவது கிளையை செந்தூலில் திறக்கின்றது இந்தியா கேட்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
March 6, 2024, 12:05 pm
கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
March 5, 2024, 5:50 pm
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் எலான் மஸ்க்
March 5, 2024, 5:17 pm