நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

தடை செய்யப்பட்ட வேதிப்பொருள்கள்: ஜான்சன்ஸ் பேபி பவுடர் விற்பனை நிறுத்தப்படுகிறது

நியூயார்க்: 

2023-ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஜான்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் இப்போது பயன்படுத்தும் "டால்க்' கனிமத்துக்கு பதிலாக சோள மாவு மூலப்பொருள் கொண்ட புதிய பவுடர் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடருக்கு எதிராக சர்வதேச அளவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர் வழக்குத் தொடுத்துள்ளனர். அதனால் கடுமையான சரும பிரச்சினைகள் நேர்வதாக ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகி உள்ளது.

Johnson & Johnson to end global sales of talc-based baby powder - CNA

இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவில் அந்த பவுடர் விற்பனை முதலில் நிறுத்தப்பட்டது. எனினும், பல்வேறு நாடுகளில் அதன் விற்பனை தொடர்கிறது.

ஜான்சன்ஸ் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் (கல்நார்) வேதிப்பொருள் அதிக அளவில் கலந்துள்ளது. இது கருப்பை புற்று நோயை உருவாக்கக் கூடியது என்பது முக்கிய குற்றறச்சாட்டாகும்.

இந்த குற்றறச்சாட்டால் ஜான்சன் நிறுவனத்தின் பிற பொருள்களின் விற்பனையும் மந்தமானது. 

பிரச்னைக்குரிய அந்த பவுடர் விற்பனையை அடுத்த ஆண்டு முதல் சர்வதேச அளவில் முழுமையாக நிறுத்திவிட நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset