நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பிழைப்பது கடினம்: சம்பவத்தை நேரில் கண்டவர் விளக்கம்

நியூயார்க்:

சர்ச்சைக்குரிய எழுத்தாளரும் ஈரான் அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவருமான சல்மான் ருஷ்டி மீது வன்முறைத் தாக்குதல் நடந்துள்ள நிலையில், அங்கிருந்து செய்தியாளர் ஒருவர் தான் கண்ட காட்சிகளை விவரித்துள்ளார்.

நியூயார்க்கில் சல்மானின் நிகழ்ச்சி நடந்த அரங்கில் இருந்த அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர் ஒருவர் கூறுகையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது கருப்பு நிற ஆடையுடன் முகத்தில் கருப்பு முகக்கவரி அணிந்திருந்த ஒருவர் வேகமாக மேடையை நோக்கி சென்றார். 

அவர் திடீரென சல்மான் மீது பாய்ந்தார். முதலில் இது சல்மானுக்கு இருக்கும் அச்சுறுத்தலை எடுத்துரைக்க நடத்தப்படும் ஸ்டன்ட் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், சில விநாடிகளில் விபரீதம் புரிந்தது. 

அந்த நபர் 20 விநாடிகளில் 10லிருந்து 15 முறை கத்தியால் குத்தியிருப்பார். சல்மான் ருஷ்டி நிலை குலைந்து சரிந்து விழுந்தார். 

அங்கிருந்தவர்கள் உடனே சல்மானின் இரு கால்களையும் உயர்த்திப் பிடித்து முதலுதவி செய்ய முயற்சித்தனர். இதன் மூலம் அவரின் இதயத்திற்கு கொஞ்சம் ரத்தம் அதிகமாகச் செல்லும் என்பதால் அவ்வாறு செய்தனர் என நினைக்கிறேன். 

சில நிமிடங்களில் அவர் ஏர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். குத்துகள் பலமாக இருக்கும்பட்சத்தில் அவர் பிழைப்பது கடினம். அவர் கண்ணிலும் குத்து பட்டுள்ளதால் அவர் பார்வையும் பறி போகும் என்று விவரித்தார்.

ஆளுநர் ஆறுதல்: இந்தச் சம்பவம் குறித்து நியூயார்க் மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நியூயார்க் போலீஸார் துரிதமாக செயல்பட்டதற்கு நன்றி. சல்மானின் அன்புக்குரியவர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் இத் தருணத்தில் ஆறுதல் கூறுகிறோம். போலீஸார் விசாரணையை முடுக்கிவிட உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களின் மிகவும் மதிக்கும் இறுதித் தூதர் முஹம்மது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் satanic verses எனும் நூலை எழுதினார். பென்குயின் பதிப்பகம் அதனை 1988 ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியிட்டது. 

Salman Rushdie did 4 marriages, even one marriage could not last! these are  their wives » Jsnewstimes

அவரது வெட்கக்கேடான எழுத்துக்களை படித்து முழு முஸ்லிம் உலகமும் அவருக்கு கண்டனம் தெரிவித்தது. அன்றைய ஈரான் அதிபர் ஆயத்துல்லாஹ் கொமேனி ருஷ்டிக்கு தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அவரது தலையை வெட்டுபவர்களுக்கு பெரும் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன் பிறகு ருஷ்டி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். மேற்குலகம் அவரை அரவணைத்து  அடைக்கலம் தந்தது. 

பல பெண்களை திருமணம் செய்த சல்மான் ருஷ்டி தன் வயதில் பாதி வயதே நிரம்பிய இளம் பெண் பத்ம லக்ஷ்மியை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவகாரத்தின் போது அவர் ஒரு காமுகர் என்றும் பத்ம லக்ஷ்மி குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset