நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

உள்நாட்டு மக்களுக்கு இஹ்ஸான் குழுமம் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது: டத்தோ அப்துல் ஹமீத் 

ரம்பாவ்: 

ரியல் எஸ்டேட் துறையின் நேர்மறையான வளர்ச்சியால் அடுத்த ஆண்டு முதல் அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று இஹ்ஸான் குழுமத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான டத்தோ அப்துல் ஹமீத் பி.வி. தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு இரண்டு வீட்டமைப்பு திட்டங்களை இஹ்ஸான் குழுமம் செயல்படுத்துவதன் மூலம் குறைந்தது 200 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை தமது நிறுவனம் வழங்கும் என்றார் டத்தோ அப்துல் ஹமீத்.

"கோவிட்-19 தொற்றுப் பரவினால், ​​பெரும்பாலான ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை அடைந்தன. மேலும், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வேலை நிறுத்தம், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை கட்டுமான நிறுவனங்கள் எதிர்கொண்டன. பல பெரிய நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாயின 

 “அந்தக் கடினமான காலங்களை நாங்கள் ஓரளவு சமாளித்துவிட்டோம், இப்போது உள்நாட்டு மக்களுக்கு வேலை தரவேண்டும் என்ற அரசாங்க கொள்கையை இஹ்ஸான் குழுமம் முன்னெடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன்வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் இரண்டு வீடமைப்பு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.

 "ஜோகூரில் உள்ள மவுண்ட் ஆஸ்டினில் 650 வீடுகளையும், நெகிரி செம்பிலானில் 448 வீடுகளையும் கட்ட எங்கள் குழுமம் திட்டமிடப்பட்டுள்ளது," என்று  நேற்று  தாமான் மவார் எஹ்சான் மாடல் ஹவுஸின் தொடக்க விழாவில் அவர் கூறினார்.

தமது நிறுவனத்தில் இதுவரையில் 18 வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும், அவை அனைத்தும் குறித்த நேரத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் டத்தோ அப்துல் ஹமீத் பி.வி. தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ரெம்பாவில் தாமான் மவார் எஹ்சான் திட்டம் மற்றும் கெடாவின் சுங்கை பட்டாணியில் உள்ள தாமான் யுனிவர்சிட்டி பெஸ்தாரி திட்டம் என இரண்டு திட்டங்கள் நடந்து வருகின்றன, இதில் மொத்தம் 595 குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

மலேசிய இளம் வயதினர் வீடு வாங்கத் தொடங்கும் சரியான தருணம் இது என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். அதிக அளவில் மக்கள் மத்தியில் சொந்த வீடு பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset