நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கார் உதிரிப் பாக உற்பத்தி துறையில் இரண்டு பில்லியன் ரிங்கிட் இழப்பு

கோலாலம்பூர்:

தொழிலாளர் பற்றாக்குறையால் கார் உதிரிப் பாகங்களின் உற்பத்தியாளர்களுக்கு இரண்டு பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

மலேசியாவில் இருந்து டயர்கள் உள்ளிட்ட ஐந்து பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உதிரிப் பாகங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு பில்லியன் இழப்பு என்பது மிகப் பெரிய தொகை என  மலேசிய வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் Malaysian Automotive Component Parts Manufacturers Association கூறியுள்ளது.

மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் இந்தத் தொகை இரண்டு விழுக்காடு ஆகும் என்று அச்சங்கத்தின் தலைவர் Chin Jit Sin தெரிவித்துள்ளார்.

இந்த இழப்பு மட்டுமல்லாமல், கார் நிறுவனங்களின் செயல்பாடுகளின் வேகம் குறைவதாகவும், கார்களை உரிய நேரத்தில் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

2019இல் கார் உதிரிப் பாகங்களின் உற்பத்தி மூலம் 26.2 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்துள்ளது என்றும், ஏற்றுமதி மூலம் ஐந்து பில்லியன் ரிங்கிட் ஆண்டுதோறும் கிடைத்து வருகிறது என்றும் Chin Jit Sin கூறியுள்ளார்.

மொத்தம், 60க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு மலேசியாவில் இருந்து உதிரிப் பாகங்கள் ஏற்றுமதி ஆவதாக அவர் தெரிவித்தார்.

மோட்டார் உற்பத்தி துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக அதன் பொருளாதார மீட்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், உற்பத்தியாளர்களால் முழு வீச்சில் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் Chin Jit Sin கவலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset