நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

கோதுமை மாவு, மைதா மாவு, ரவை ஏற்றுமதிக்கு இந்தியா தடை

புது டெல்லி:  

கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா கடந்த மே மாதம் தடைவிதித்த நிலையில், தற்போது கோதுமை மாவு, மைதா மாவு, ரவை ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

ஏற்றுமதியாளர்கள் கோதுமை மாவு ஏற்றுமதி செய்யும்போது அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவிடமும் ஒப்புதல் பெற வேண்டும் என்று விதி மாற்றப்பட்டுள்ளது. இது வரும் 12ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

உள்நாட்டில் மேற்கண்ட பொருள்களின் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கும் வகையில் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், "கோதுமை மாவு ஏற்றுமதிக் கொள்கை இப்போதும் எளிமையானதாகவே உள்ளது. எனினும், அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று விதி மாற்றப்பட்டுள்ளது.

"இது கோதுமை மாவு, மைதா, ரவை, உடைத்த கோதுமை உள்ளிட்டவற்றுக்கும் பொருந்தும்' என்று கூறப்பட்டுள்ளது.

கோதுமை ஏற்றுமதியில் மற்றொரு முக்கிய நாடான இந்தோனேசியாவிலும் விளைச்சல் குறைந்ததால் ஏற்றுமதி குறைந்தது. இந்தியாவில், வெப்ப அலை உள்ளிட்ட காரணங்களால் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்ட காரணத்தாலும், கோதுமை விலை உயர்வைத் தடுக்கும் நோக்கிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்தது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset