நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜிஎல்சி, ஜிஎல்ஐசி நிறுவன வாரிய இயக்குநர்கள் குழுவில் எம்டியூசி பிரதிநிதிகள்

கோலாலம்பூர்:

வாரத்திற்கு 4 நாட்கள் பணி குறித்தும் வேலை நேரம் குறித்தும் ஆலோசித்து விவாதிக்கும் பொறுப்பை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம் சரவணனிடமும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸிடமும் விட்டுவிடுவதாக பிரதமர் இஸ்மாயில் சபரி யாகூப் இன்று மலாயா பல்கலை கழகத்தில் நடைபெற்ற MTUC பேராளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

​​​​ஜிஎல்சி, ஜிஎல்ஐசி நிறுவனங்களின் வாரிய இயக்குநர்கள் குழுவின் எம்டியூசி எனப்படும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸில் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும் 

காங்கிரஸில் 22ஆவது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் மேற்கண்டவாறு கூறினார்.

16.5 தொழிலாளர்கள் வர்க்கத்தை கொண்டது தான் எம்டியூசி. கடந்த 1949ஆம் ஆண்டு முதல் எம்டியூசி தொழிலாளர்களின் உரிமைக்காக இக்காங்கிரஸ் போராடி வருகிறது.

காங்கிரஸ் பிரதிநிதிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

அவ்வகையில் ஜிஎல்சி, ஜிஎல்ஐசி  ஆகிய அரசு சாரா நிறுவனங்களின் இயக்குநர்கள் வாரிய குழுவில் அப்பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

குறிப்பா ஈபிஎம், பெர்கேசோ ஆகியவற்றில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இதன் மூலம் அரசு சாரா நிறுவனங்களில் அவர்களின் பங்களிப்பு இருக்கும். அதே வேளையில் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காணப்படுவதற்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset