நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறாதீர்: வணிகர்களுக்கு அமைச்சு எச்சரிக்கை

கோலாலம்பூர்:

பொருட்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலைய யாரும் மீற வேண்டாம் என்று வணிகர்களுக்கு உள்நாட்டு வாணிப பயணீட்டாளர் துறை அமைச்சு எச்சரித்துள்ளது.

நாட்டில் பொருட்களின் விலையை கட்டப்படுத்துவதுடன் மக்களுக்கு எந்த சுமையையும் ஏற்படுத்தக்கூடாது என அரசாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் அடிப்படையில் தீபகற்ப மலேசியாவில் கோழியின் உச்சவரம்பு விலையாக 9 வெள்ளி 40 காசை நிர்ணயித்துள்ளது.

அதே வேளையில் ஏ கிரேட் முட்டைக்கு 45 காசு, பி கிரேட் முட்டைக்கு 43 காசு, சி கிரேட் முட்டைக்கு 41 காசு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மற்ற பொருட்களுக்கும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலைகளிலேயே பொருட்களை வணிகர்கள் விற்க வேண்டும். இதில் எந்தவொரு வரம்பு மீறல்களும் இருக்கக் கூடாது என்று அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset