நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

குடியரசுத் துணைத் தலைவருக்கு ஆகஸ்ட் 6-இல்  தேர்தல்

புது டெல்லி:

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெறும் என்றும், அதேநாளில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய குடியரசு துணைத்தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

வேட்பு மனு தாக்கல் ஜூலை 5 தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்  ஜூலை 19, வேட்புனு பரிசீலனை ஜூலை 20, வாபஸ் பெறுவது ஜூலை 22 -ஆம் தேதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள் உள்ளிட்டோர் குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

மக்களவை, மாநிலங்களவை உள்ளிட்ட இரு அவைகளிலும் மொத்தம் 788 உறுப்பினர்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset