நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மும்பை முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா: பாஜக முதல்வர் பதவியேற்கிறார்

மும்பை:

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை புதன்கிழமை இரவு ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.

அவருடைய தலைமையிலான அரசு மீது வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுப்பு தெரிவித்த சில மணி நேரத்தில், ராஜிநாமா முடிவை உத்தவ் தாக்கரே அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகைக்கு இரவு சென்ற உத்தவ் தாக்கரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் பகத் சிங் கோஷியாரியிடம் சமர்ப்பித்தார்.

அவருடைய ராஜிநாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரவ் தாக்கரேவின் ராஜிநாமாவை பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

அதிருப்தி சிவசேனை எம்பிக்களுடன் சேர்ந்து பட்னவீஸ் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார்.

சட்டப்பேரைவயில் நடைபெறும் எண்ணிக்கை விளையாட்டில் எனக்கு விருப்பமில்லை. எனவே, முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதோடு, எனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்கிறேன். பதவியை ராஜிநாமா செய்வதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் எந்தவித பிரச்னையுமின்றி மாநிலம் திரும்புவதற்கு சிவசேனை தொண்டர்கள் அனுமதிக்கவேண்டும்.

அவர்களுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset