நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நல்ல தலைவர் சமூகத்திற்கு நன்மை செய்யும்போது அது சரித்திரம் ஆகும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோவை:

இன்னும் 50 ஆண்டுகளுக்கு பிறகு  வருமையின் காரணமாக குழந்தை பெற்றெடுப்பது நிருத்தபட்டு, முதியவர் சமூகமாக மாரப்போகிறது. ஏற்படபோகும் 4 வது தொழிற்புரட்சியால் கொரனா பாதிப்பில் ஏற்பட்ட வேலை இழப்பை விட அதிகமான வேலை இழப்பு ஏற்படும் என்பதால் எதிர்கொள்ள தயார்படுத்திகொள்ளுமாரு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் அறிவுறுத்தினார்.

கோயம்புத்தூர் பெண்களுக்கான பட்டமளிப்பு விழாவில் முன்னதாக அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோயம்புத்தூரில் , கே.பி.ஆர் குழுமத்தின் பெண் பணியாளர்கள் கல்வி பிரிவு சார்பில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைகழகத்தில்  பட்ட படிப்பு முடித்த கே.பி.ஆர் குழும பெண் பணியாளர்களுக்கு பட்டம் வழங்கும் விழா மற்றும் குறிஞ்சி தமிழ் மன்றம் சார்பில் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மலேசியா மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணனுக்கு தேசிய  மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதை செலுத்தி சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். அப்போது அவர்களின் அணிவகுப்பு மறியாதையை அமைச்சர் ஏற்று கொண்டு நன்றி தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து  நிகழ்ச்சியில் அமைச்சர் சரவணனை வரவேற்று பேசிய பத்திரிக்கையாளர் மரபின் மைந்தன் முத்தையா கூறுகையில், உழைப்பால் உயர்ந்தவர் ஒருவிதம், உழைப்பால் உயர்ந்தும் பழையதை மறக்காதவர்கள் ஒருவிதம். ஆனால், அமைச்சர் சரவணன் இந்த இரண்டு விதமும் என பாரட்டியதோடு, சக மனிதரின் துயரத்தை போக்குவதே சிறந்த தர்மம் என பாரதியார் கூறியதற்கு எடுதுக்காட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் என்றார்.

அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன்,
பட்டப் படிப்பு முடித்த 603 பெண்களுக்கு சான்றிதழ்களையும் , பட்டப் படிப்பில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு பரிசு மற்றும் கேடயங்களையும் வழங்கினார். 

சிறப்புரையாற்றிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன்,   எந்த ஒரு சமூகமோ, இனமோ, நிர்வாகமோ  எதுவாக இருந்தாலும் நிகழ்கால பிரச்சனை மற்றும் எதிர்கால சவால் ஆகிய இரண்டை பற்றி தெரியாவிட்டால்  யாரும் அழிக்க வேண்டாம்; தாமாக அழிந்துவிடும் என்றார். 

மேலும் இன்னும் 10 ஆண்டுகளில் ஏற்படபோகும் மிக பெரிய நான்காவது தொழில்புரட்சியால் கொரனா பாதிப்பால் ஏற்பட்ட வேலை இழப்பை விட அதிகளவில் வேலை இழப்பு ஏற்படும் என்றும், நிகழ்கால பிரச்சனை இதுவென்றால், எதிர்கால சவால் என்பது இன்னும் 50 ஆண்டுகளில் 70 சதவிகிதம்  தொழிற்சாலைகள் உருவாகி விளை நிலங்களே காணாமல் போய் உணவு பஞ்சம் ஏற்படபோகிறது என்றும், வறுமை, வேலையில்லா திண்டாட்டம் காரணமாக நாம் ஒருவருக்கு ஒருவர் துணை என்ற மன நிலை உண்டாகி குழந்தைகள் பெற்றெடுப்பது குறைந்து ஒரு கட்டத்தில் இந்த சமூகமே முதியவர்கள்  சமூகமாக மாறிவிடும் என்றார்.மேலும் இயற்கை மாற்றத்தால் சீரழிவும் விபரீதமும் ஏற்படபோவதாக எச்சரித்த அமைச்சர் சரவணன், இந்த நிகழ்கால பிரச்சனை மற்றும் எதிர்கால சவால் ஆகிய இரண்டையும் தெரிந்து கொண்டு அவற்றை எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ள வெண்டும் என பெண்களுக்கு அறிவுருத்தினார்.  

 தொடர்ந்து பேசிய அமைச்சர், புத்தகம் என்பது வாழ்க்கையில் சரித்திரத்தை ஏற்படுத்த கூடியதாகவும், நல்ல புத்தகம் என்பது படித்ததும் நல்ல கனவை ஏற்படுத்தும். அதன் மூலம் நல்ல சிந்தனை பிறந்து அது செயலாக மாறி நல்ல தலைமுறை உண்டாகும்.

பின்னர் நல்ல தலைமுறையில் இருந்து நல்ல தலைவர் உண்டாகி சமூகத்திற்கு நன்மை செய்யும் போது அது சரித்திரமாகும் என்பதால் புத்தகங்கங்கள் படைக்கப்படவேண்டும், புத்தக படைப்பாளிகள் போற்றபடவேண்டும் என கேட்டு கொண்டார்.

மேலும் கவிஞர் சிற்பி பாலசுப்ரமனியத்தின்  ஒரு கவிதை தன்னை வெகுவாக கவர்ந்ததாகவும் அதன் பொருளை விளக்குவதாகவும் கூறி, யார் நம்மை பழித்தாலும் கண்டு கொள்ள வேண்டாம் என்றும் அவர்களை புறக்கணிப்பதை தவிர வேறு பெரிய தண்டனை இல்லை என்றார்.

அதனை தொடர்ந்து குறிஞ்சி தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலைமாமணி கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு "குறிஞ்சி தமிழ் செம்மல்" என்ற விருதினை அமைச்சர்  டத்தோ ஸ்ரீ சரவணன் வழங்கி கவுரவித்தார்.   

மேலும்  தமிழ் ஆசிரியை ஷியாமலாவுக்கு நல்லாசிரியர் விருதினை மாஹ்ஸா மருத்துவ பலகலைகழக நிறுவனர் வேந்தர் முஹம்மது ஹனீபா மற்றும் கே.பி.ஆர் குழுமத் தலைவர் ராமசாமி ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கே.பி.ஆர். குழும தலைவர் ராமசாமி, மலேசியா மனிதவள தலைமை செயல் அதிகாரி ஷாகுல் ஹமீது உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset