நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் இல்லத்திலும் நினைவிடத்திலும் மனிதவள அமைச்சர் சரவணன்

இராமேஸ்வரம்: 

இராமேஸ்வரத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே .அப்துல்கலாமின் இல்லம் சென்று அவரது குடும்பத்தாருடன் மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் நலம் விசாரித்து உரையாடினார். 

அப்துல்கலாமின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவர் மலேசியாவில் தமிழ் குறித்து சிறப்புரையாற்ற வருமாறு அப்துல்கலாமின் அண்ணன் மகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் இந்திய குடியரசு தலைவரும் விஞ்ஞானியுமான மறைந்த  டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாரை மலேசியா மனித வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் நேரில் சந்தித்து பேசினார். 

அப்போது டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாமின் அண்ணன் மகன் ஜைநுலாபுதீன், அண்ணன் மகள் முனைவர் பேராசிரியர் நசீமா மரைகாயர், அண்ணன் பேரன் ஷேக் சலீம் ஆகியோரை சந்தித்து   நலன் விசாரித்ததோடு அப்துல்கலாமின் வாழ்க்கை முறைகள் குறித்தும் முக்கிய நினைவுகள் குறித்தும்  கேட்டறிந்தார். 

May be an image of 3 people, people standing, monument and outdoors

அப்போது அப்துல்கலாம் குடும்பத்தார் அமைச்சருக்கு சந்தன மாலை அணிவித்து கெளரவித்தனர். மேலும் முனைவர் நசீமா மரைகாயர், தான் எழுதிய "அப்துல் கலாம் நினைவுக்கு மரணமில்லை" என்ற நூலை அமைச்சருக்கு  நினைவு பரிசாக வழங்கினார். பரிசை பெற்றுகொண்ட அமைச்சர் டத்தொ ஸ்ரீ சரவணன் மலேசியாவிற்கு வந்து தமிழ் குறித்து சிறப்புரையாற்ற வர வேண்டும் என்று முனைவர் நசீமா மரைகாயரை  அழைப்பு விடுத்தார். 

May be an image of 6 people, people sitting and people standing

பின்னர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களாலேயே 2011 ஆண்டு அவரது இல்லத்தின் மாடியில் திறந்து வைக்கபட்ட " தி லைஃப் மிஷன் ஆஃப் கேலரி " என்ற நினைவு காட்சி அரங்கிற்கு சென்று அங்கு அப்துல்கலாமின் சான்றிதழ்கள், அவர் எழுதிய புத்தகங்கள், அவரின் சில உடமைகள், அவர் செய்த சாதனைகளின் விளக்க மாதிரிகள், பணியாற்றிய இடங்களின் புகைபடங்கள் போன்றவற்றை பார்வையிட்டார்.

May be an image of 9 people, people standing and indoor

அதனை தொடர்ந்து   இராமேஸ்வரம் பேகரும்பில் உள்ள  ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவிடத்திற்கு சென்று பார்வையிட்டார். அப்போது அங்குள்ள அப்துல்கலாமின் கல்லறையை வணங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

May be an image of 1 person, standing and text that says 'Touch ... ECONOMIC PROSPERITY AND NATIONAL SECURITY THROUGH TECHNOLOGY ND KNOWLEDGE POWER FOR BRANT & SELF-RELIANT IN -A.P.J. Abdul K'

பின்னர் அங்கு வைக்கபட்டுள்ள டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் சாதனைகள் , அவர் பணியாற்றிய இடங்கள், அவரது கண்டுபிடிப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையிலான புகைபடங்கள் , அவர் போன்ற சிலைகள், அவர் உருவாக்கிய அக்னி, பி.எஸ்.எல்.வி போன்ற ஏவுகனைகளின் மாதிரிகள், இறுதி காலத்தில் அவர் வைத்திருந்த சில எளிய உடமைகள் ஆகியவற்றை பார்வையிட்டார். 

மேலும் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குடியரசு தலைவராக இருந்தபோது அவர் அதற்குரிய இருக்கையில் அமர்ந்திருப்பது போன்று தத்ரூபமாக வடிவமைக்கபட்டிருந்த சிலையின் அருகில் மறியாதையோடு நின்று புகைபடம் எடுத்துகொண்டார். 

May be an image of 5 people, people standing and indoor

அப்போது அமைச்சருடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், மலேசியா மனித வள மேம்பாட்டு வாரிய தலைமை செயல் அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset