நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

தூக்கணாங்குருவி மூலம் தூயோன் இறைவனை அறிவோம்! - வெள்ளிச் சிந்தனை 

தூக்கணாங்குருவி  ஊர்க்குருவி வமிசத்தைச் சேர்ந்த ஒரு பறவை. அளவிலும் உடலமைப்பிலும் இது ஊர்க் குருவியைப் போலிருக்கும். ஆனால் இதன் மேல்தலை, மார்பு மஞ்சளாக இருக்கும். 

இந்தக் குருவி இந்தியத் துணைக் கண்டம் மற்றும் தென் கிழக்காசியாவில் பரவலாகக் காணப்படும் ஒரு பறவை. 

இது பொதுவாக 15 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியது. 

வால்பகுதி சிறியதாகவும் மேல்பகுதி தடித்தும் காணப் படும். சராசரியாக 20 கிராம் எடை கொண்டது. 

இது புல், அரிசி, கோதுமை, சோளம், தினை போன்ற தானிய வகைகளை உட்கொள்ளும். 

பயிர்களின் இலைநரம்புகள், நார்கள் இவற்றின்மூலம் இக் குருவி பின்னும் தொங்குகூடு வியப்பானது. கூடு சுரைக்காய் போன்ற வடிவம் கொண்டிருக்கும்.உயரமான மரங்களிலே தனது கூடுகளை அமைத்துக்கொள்ளும். 

மழைநீர் ஒரு துளிகூட உள்ளே செல்லாதவாறு மிக நேர்த்தியாக பின்னப்பட்ட கூட்டுக்குள், தனது அனைத்து தேவைகளுக்கும் தனித்தனி அறையை இந்தக் குருவி அமைத்துக் கொள்கிறது. இந்தக் கூட்டைக் கட்டிமுடிக்க அதற்கு மொத்தம் பதினெட்டு நாட்கள் ஆகிறது. 

ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் வெளிச்சத்துக்காக ஒரு மின்மினிப் பூச்சியை மெனக்கெட்டு பிடித்து வந்து கூட்டினுள் சொருகி விடுகிறது. 

ஒரு சிறு பல்பை எரிய வைக்க... நமது சக்தியை எல்லாம் திரட்டினாலும் மின்சாரமின்றி அது சாத்தியமில்லை. 

ஆனால், எல்லாம் வல்ல இறைவன் தனது வல்லமையால் படைத்துள்ள ஒரு சிறு மின்மினிப் பூச்சி தனக்குள் ஒளியை வைத்துக்கொண்டு பறக்கிறது. 

அதை இன்னொரு உயிரினம் தனது கூட்டுக்கு வெளிச்சமாக பயன்படுத்திக் கொள்கிறது என்றால், இது இறை ஆற்றல் இன்றி வேறு என்னவாக இருக்கமுடியும் கூறுங்கள்! 

ஒவ்வொரு பறவையும் தனது சூழலுக்கேற்பவும், திறமைக் கேற்பவும் தான் வாழ்கிற கூடுகளை வடிவமைக்கின்றன. 

ஆனால், இவை யாவற்றையும்விட தூக்கணாங்குருவிக் கூடு, ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணம் அழகியல் செறிவுடனும், நேர்த்தியுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

நம் சிற்றறிவுக்கு எட்டாத வண்ணம் இன்னும் எத்தனை உயிர்கள் என்னென்ன ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கின்றனவோ! 

ஆக...தூக்கணாங் குருவி மூலம் மட்டுமல்ல;  மின்மினிப் பூச்சியின் மூலமும் மேலோன் இறைவனை அறிவோம்!

கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ

தொடர்புடைய செய்திகள்

+ - reset