நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குவைத் நாடாளுமன்றம் கலைப்பு

துபை:

குவைத் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்த நாட்டு பட்டத்து இளவரசர் ஷேக் மேஷல் அல் அஹமது அல் ஜாபர் அறிவித்தார்.

நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் நாட்டின் அரசியல் சாசனத்தை ஆளும் அரசக் குடும்பம் மதித்தாலும், நாடாளுமன்றத்தின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை கருத்தில் கொண்டு அதனைக் கலைப்பதாக அவர் கூறினார்.

நாடாளுமன்றத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, குவைத் அமைச்சரவை 2 மாதங்களுக்கு முன்னர் ராஜிநாமா செய்தது.  

அதையடுத்து, புதிய அரசை நியமிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்துக்குள்ளிருந்தபடி எம்.பி.க்கள் கடந்த வாரம் அமளியில் ஈடுபட்டனர். இது, பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset