நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நான் பொதுக்குழுவில் கலந்துகொள்வேன்: ஓ.பன்னீர் செல்வம் 

சென்னை:

அதிமுக பொதுக்குழு கூட்டம்  நாளை  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்துள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க கோரி, எடப்பாடி பழனிசாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கடிதம் எழுதியிருந்தார். 

ஒற்றைத் தலைமை விவகாரத்தால், பொதுக்குழு கூட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கடிதம் எழுதியுள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் 23ஆம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என்றும், அதை ஒத்திவைக்கும் அளவுக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

பெரும்பான்மையான நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு ஏற்ப கூட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தாங்களும் கட்டாயம் அதில் பங்கேற்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதேபோல தணிகாச்சலம் என்பவரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

நாளை நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொள்வாரா என்று கேள்வி இருந்துவந்தன.

இந்தநிலையில், உயர் நீதிமன்ற விசாரணையின்போது, ’நாளை நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் நான் கலந்துக் கொள்வேன். ஆனால், ஏற்கெனவே என்னிடம் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்கள் கொண்டுவரக் கூடாது’ என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset