நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கோழி ஏற்றுமதிக்கு தடை: பிரதமர் அறிவிப்பு 

கோலாலம்பூர்:

கோழிகளின் ஏற்றுமதியைத் தற்காலிகமாக நிறுத்தவுள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது. 

உள்நாட்டில் கோழிகளின் விநியோகமும் விலையும் நிலையாகும் வரை, இத்தகைய சில முடிவுகள் எடுக்கப்படுவதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் தெரிவித்துள்ளார். 

மலேசியாவிலிருந்து மாதந்தோறும் 3.6 மில்லியன் கோழிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மலேசிய கோழிகள் அதிக அளவில் சிங்கப்பூருக்கும் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன.

கோழி ஏற்றுமதி தடை நடவடிக்கை அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து  நடப்புக்கு வரும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். 

Singapore does not import chicken and eggs from Kelantan: AVA - TODAY

மலேசிய அரசாங்கம் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.  

உணவுப் பொருட்களின் விலையேற்றம், தட்டுப்பாடு, கோழி பற்றாக்குறை இது குறித்து இன்று அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் தலைமையில் விரிவாக பேசப்பட்டு ஏற்றுமதிக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மலேசியப் பயனீட்டாளர்கள் கோழி விலை அதிகரிப்பது குறித்துக் குறை கூறி வருகின்றனர். விலையேற்றத்தின் காரணமாக விற்பனையாளர்கள் விற்கப்படும் கோழிகளின் எண்ணிக்கையையும் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. 

சந்தையில் கோழி தட்டுப்பாடு ஏற்படக்கூடாது. அவ்வாறு பற்றாக்குறை இருந்தால் ஏதோ தவறு நடக்கிறது என்று அர்த்தம். வணிகர்கள் சந்தையில் கோழி விளையாட்டை தொடர வேண்டாம் என்று விவசாயம் மற்றும் உணவுத் தொழில் துறை இரண்டாவது துணை அமைச்சர் டத்தோ நிக் முஹம்மது ஜவாவி சலே எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset