நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொழில்நுட்பக் கோளாறுகளால் பிகேஆர் கட்சித் தேர்தல் முடிவுகளில் பாதிப்பு இருக்காது: டாக்டர் ஸுலைஹா முஸ்தஃபா

கோலாலம்பூர்:

பிகேஆர் உட்கட்சித் தேர்தலின்போது வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள், தவறான தகவல் பரிமாற்றங்கள் காரணமாக, ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளில் எந்தவித பாதிப்பும் இருக்காது என அக் கட்சியின் தேர்தல் கமிட்டி தலைவரான டாக்டர் ஸுலைஹா முஸ்தஃபா (Dr Zaliha Mustafa) தெரிவித்துள்ளார்.

நான்கு மாநிலங்களில் உள்ள எட்டு தொகுதிகளில் இத்தகைய பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக, வாக்களிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட டேப்லெட் கருவிகளில் tablet devices ஏற்பட்ட கோளாறால் அவற்றை மீண்டும் மீண்டும் அணைத்து, அதன் செயல்பாட்டை தொடங்க வேண்டியிருந்தது.

அதேபோல், ஹுலு சிலாங்கூர் தொகுதியில் வாக்குப்பதிவுக்கான எந்தவித வசதிகளும் செய்து தரப்படாததால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் அறிவித்தார்.

மற்ற தொகுதிகளைப் பொறுத்தவரை, தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டன, அல்லது, நேரடி வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அதற்குரிய வாக்குச்சீட்டுகளும் அளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எனினும், அத் தொகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில், அங்கு மறுதேர்தல் நடத்தப்படும் என்றும், அதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

"தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட தொகுதிகளில் உள்ள உறுப்பினர்களுடன் நாங்கள் பேச வேண்டியுள்ளது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில், மறு வாக்குப்பதிவு நிச்சயம் நடத்தப்படும். எந்தவித எதிர்ப்பும் எழவில்லை எனில், தேர்தல் முடிவுகள் தொடர்பில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதாக நான் கருதிக்கொள்வேன்," என்றார் டாக்டர் ஸுலைஹா (Dr Zaliha Mustafa).

தொடர்புடைய செய்திகள்

+ - reset