நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்கள் விரும்பினால் தேர்தல் களம் காண்பேன்: ஸுல்கிஃப்ளி அஹ்மத்

கோலாலம்பூர்:

மக்கள் விரும்பினால் தேர்தலில் போட்டியிட தாம் தயாராக இருப்பதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் ஸுல்கிஃப்ளி அஹ்மத் தெரிவித்தார்.

Tasek Gelugor தொகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மீன்கள் விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், Tasek Gelugor நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடத் தயார் என்றார்.

"எனினும், மக்கள் அழைத்தால் மட்டுமே தேர்தல் களம் காண்பேன். உண்மையில் நான் தீவிர அரசியலில் இல்லை. மேலும், எந்தவொரு அரசியல் கட்சியின் உறுப்பினரும் அல்ல.

"ஒருவேளை Tasek Gelugor தொகுதி மக்கள் தேர்தலில் போட்டியிட அழைத்தால் அதற்கு மறுப்பு தெரிவிக்க மாட்டேன். அதே சமயம் தேர்தலில் போட்டியிட்டாலும், இல்லாவிட்டாலும் Tasek Gelugor தொகுதி மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்றி வருவேன். ஏனெனில், இது எனது சொந்த ஊர் ஆகும்," என்றார் ஸுல்கிஃப்ளி அஹ்மத்.

நேற்றைய நிகழ்வில் சுமார் ஆயிரம் பேருக்கு 1.2 டன் (ikan kembung - mackerel) மீன்களை அவர் விநியோகித்தார்.

தொகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், அவ்வழியே சென்ற பொதுமக்களுக்கும் ஒரு கிலோ எடை கொண்ட மீன் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.

கடந்த 2016, ஆகஸ்ட் 1ஆம் தேதி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் ஸுல்கிஃப்ளி அஹ்மத்.

எனினும், 14ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று, 2018 மே மாதம் ஆட்சி அமைத்ததும் அவர் அப் பதவியில் இருந்து விலகினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset