நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதுப் போதையில் வாகனமோட்டிய மூத்த குடிமகன் உட்பட 23 பேர் கைது

கோலாலம்பூர்:

மதுப் போதையில் வாகனங்கள் ஓட்டிய மூத்த குடிமகன் உட்பட 23 பேரை கோலாலம்பூர் காவல்துறையினர் கைது செய்தனர்.

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது, சட்டவிரோத ரேஸ், இதர போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக கோலாலம்பூரில் போலிசார் மூன்று நாள் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

அப்போது மேற்குறிப்பிட்ட 23 பேர் அல்லாமல், 8 இருசக்கர வாகனமோட்டிகளும் பந்தயத்தில் ஈடுபட்டதற்காக தடுத்து வைக்கப்பட்டனர் என்று கோலாலம்பூர் போக்குவரத்துப் புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறையின் தலைவர் ஸரிஃபுதீன் முஹம்மது சாலேஹ் (Sarifudin Mohd Salleh) தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டவர்கள் 68 வயதான ஆடவரும் அடங்குவார்.

அந்த எட்டு இருசக்கர வாகனமோட்டிகளும் சூப்பர் மேன், ராக்கெட் போன்ற சாகசங்களை ஆபத்தான முறையில் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

எட்டு பேரும் 16 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் என்று குறிப்பிட்ட அவர், அனைவரும் கோலாலம்பூர் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், ஆபரேஷன் மோட்டார் சைக்கிள் Op Motosikal நடவடிக்கையானது, சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் உரிய புகை வெளியேற்றும் கருவியை பொருத்தாத வாகனமோட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மொத்தத்தில், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 435 சம்மன்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றும், 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset