நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பழங்குடியின மக்களை அரசு பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்

உதகை: 

நீலகிரி மலைகளோடு சேர்த்து பழங்குடியின மக்களையும்‌ அரசு பாதுகாக்கும் என்று அப்பகுதி மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்‌ இன்று நீலகிரி மாவட்டம்‌, உதகை அருகே உள்ள, பகல்கோடு மந்து கிராமத்தில்‌ தோடர்‌ பழங்குடியின மக்களின்‌ குடியிருப்புகளைப்‌ பார்வையிட்டு, கோரிக்கைகளை கேட்டறிந்தார்‌. அங்கு அவர்களது குடியிருப்புப்‌ பகுதிகளைப்‌ பார்வையிட்டார்‌. 

மேலும்‌, அக்கிராமத்தைச்‌ சேர்ந்த தோடர்‌ பழங்குடியின மக்களிடம்‌, அவர்களது வாழ்க்கை, கலாச்சார முறை குறித்து கேட்டறிந்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்‌ கொண்டார்.

அப்போது அம்மக்கள்‌ முதல்வர் ஒருவர்‌ தங்கள்‌ பகுதிக்கு வருவது இதுவே முதல்‌ முறை என்றும்‌, தோடர்‌ பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதற்கு நன்றியையும்‌ மகிழ்ச்சியையும்‌ தெரிவித்துக்‌ கொண்டனர்‌. 

மேலும்‌, மாவட்ட அளவில்‌ ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின்‌ கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஒரு தனி இணைய முகப்பு ஆரம்பித்து தங்களது தேவைகளை உடனடியாக நிறைவேற்றித்‌ தருவதற்கு நன்றி தெரிவித்தனர்‌.

தொடர்புடைய செய்திகள்

+ - reset