நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரானார் ஆன்டனி அல்பனீசி

கேன்பெரா:

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) பொறுப்பேற்கவுள்ளார். தற்போதைய பிரதமர் பிரதமர் ஸ்காட் மோரிசன் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

59 வயதாகும் திரு. அல்பனீசியின் தலைமையில் பத்தாண்டில் முதல்முறையாகத் தொழிற்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தொழிற்கட்சியின் வெற்றிவிழாவில் அல்பனீசி ஒற்றுமைக்குக் குரல் கொடுத்தார்.

ஆஸ்திரேலியர்கள் மாற்றத்துக்கு வாக்களித்திருப்பதாக அவர் சொன்னார்.

ஆஸ்திரேலியாவை மாற்று எரிபொருளின் வல்லரசாக மாற்றப் போவதாகவும் அவர் அறிவித்தார்.

பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சியின் தோல்வியை அவர் ஒப்புக் கொண்டார். மேலும், அவர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகவும்  அறிவித்துள்ளார்.

3 ஆண்டுகளில் வலுவான தலைமைத்துவத்தின் கீழ், கூட்டணி மீண்டும் அரசாங்கத்தைக் கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

-AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset