நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் 2 வாரங்களாக பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை ரத்து

கொழும்பு:

இலங்கையில் கடந்த இரண்டு வாரங்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த அவசரநிலை ரத்து செய்யப்பட்டது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், கடந்த ஏப்.1ஆம் தேதி நாட்டில் அவசரநிலையைப் பிறப்பித்து அதிபர் கோத்தபய ராஜபட்ச உத்தரவிட்டார். எனினும் ஏப். 5ஆம் தேதி அவசரநிலை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமாகி மே 6ஆம் தேதி அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அன்றைய தினம் நள்ளிரவு முதல் மீண்டும் அவசரநிலையைப் பிறப்பித்து அதிபர் உத்தரவிட்டார்.

அந்த அவசரநிலை அறிவிப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு திரும்பப் பெறப்பட்டது. இலங்கையில் சட்டம்ஒழுங்கு சூழல் மேம்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40,000 மெட்ரிக் டன் டீசல்: கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், "இந்தியாவிலிருந்து கடனுதவித் திட்டத்தின் கீழ் அனுப்பிவைக்கப்பட்ட மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் கொழும்பை வந்தடைந்தது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் ரூ.11.67 கோடி உதவி: ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு மூலம் இலங்கைக்கு 1.5 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.11.67 கோடி) வழங்க உள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset