நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜேபிஎன் தரவுகள் கசிவு: நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எழவில்லை என்கிறார் ஹிஷாமுடின்

கோலாலம்பூர்:

ஜேபிஎன் தரவுகள் இணையம் வழி விற்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் காரணமாக நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் எழவில்லை என தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

தரவுகள் கசிவு உள்ளிட்ட எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் உள்துறை அமைச்சுக்கு உள்ளது என்றார் அவர். எனினும் பல்வேறு தரப்பினரும் தரவுகள் கசிவு தொடர்பாக கவலை கொண்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.

"உள்துறை அமைச்சில் சிறப்புப் பிரிவு உள்ளது. உள்துறை அமைச்சராக இருந்த வேளையில் அவர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளேன்.

"அவர்கள் இந்த விவகாரத்தை கையாள்வார்கள் என நம்புகிறேன். மேலும், இதுபோன்ற மிரட்டல்களால் நம் நாட்டின் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் ஏற்படாது," என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்தார்.

முன்னதாக, Lowyat.net என்ற இணையத்தளம் ஜேபிஎன் தரவுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், 1940 முதல் 2004 வரை பிறந்துள்ள சுமார் 22.5 மில்லியன் மலேசியர்களின் விவரங்கள் அந்தத் தரவுத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளதாகவும், அதன் விலை 44 ஆயிரம் ரிங்கிட் எனவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து சர்ச்சை வெடித்தது. அந்தத் தரவுத்தொகுப்பில் ஒவ்வொரு மலேசியரின் முழுப்பெயர், முகவரி, அடையாள அட்டை எண், புகைப்படம் ஆகியவை உள்ளதாகவும், மலேசிய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் உள்ள தரவுகளும்கூட விற்பனைக்கு வந்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.

இந்நிலையில், இந்தத் தரவுகள் கசிவு காரணமாக நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டுவிடாது என அமைச்சர் தெளிவுபடுத்தி் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset