நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்திவைப்பு

கொழும்பு:

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மகிந்த ராபட்ச தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை அதிபர் கோத்தபய ராஜபட்ச நியமித்தார். இதற்கிடையே, அதிபருக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பெலவெகய நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடியது.

அப்போது  அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்கும் வகையில் அவையின் அலுவல்களை நிறுத்திவைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

ஆனால், அவையின் அலுவல்களை நிறுத்திவைக்க அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவையின் அலுவல்களை நிறுத்திவைப்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்த அவைத் தலைவர் மகிந்த யாபா அபய்வர்த்தன உத்தரவிட்டார்.

அதன்படி நடைபெற்ற வாக்கெடுப்பில் அலுவல்களை நிறுத்தி வைப்பதற்கு ஆதரவாக 68 எம்.பி.க்கள் வாக்களித்தனர். எதிராக 119 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதனால் அந்தத் தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டு, அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்களில் புதிதாக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என எஸ்ஜேபி கட்சி எம்.பி. ஹர்சா டி சில்வா தெரிவித்தார்.

அதிபருக்கு எதிரான தீர்மானம் வரும் வெள்ளிக்கிழமை விவாதத்துக்கு வரலாம் எனவும் எஸ்ஜேபி கட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே, இலங்கை நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவராக ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. அஜித் ராஜபட்ச  தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset