நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

'தாய்மை'யைப் போற்றி, உதவிக்கரம் நீட்டும் இணையத்தளம்: ஸுரைடா கமாருடின் தொடக்கி வைத்தார்

கோலாலம்பூர்:

தாய்மை “Mothering” எனப் பொருள்படும் புதிய இணையத்தளம் ஒன்றை தோட்டத்தொழில்துறை அமைச்சர் டத்தோ ஸுரைடா கமாருடின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

அனைத்து தாய்மார்களையும் பெருமைப்படுத்தும் வகையில் இந்த இணையத்தளம் தொடங்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அனைத்து தாய்மார்களையும் அவர்களின் தியாகங்களுக்காக அங்கீகரிக்கும் வகையில், அனைத்துலக அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட ஒரு வாரத்துக்குப் பின்னர் இந்த இணையத்தளம் தம்மால் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தாய்மார்களுக்கு தங்களுக்குரிய உரிமைகள் குறி்தது போதிக்கவும், தனித்து வாழும் தாய்மார்களுக்கு (single mothers) உதவவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை உறுதிப்படுத்தவும் இந்தப் புதிய இணையதளமானது இணைப்புப் பாலமாகச் செயல்படும் என்று அமைச்சர் ஸுரைடா கமாருடின் கூறினார்.

"நானும் ஒரு தாய் என்ற வகையில் தாய்மார்களின் நிலை குறித்து நன்கு அறிந்துள்ளேன். உங்கள் குடும்பங்களைப் பார்த்துக்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டியுள்ளது, குடும்பத்தாரை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள என்னென்ன தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது என்பதும் தெரியும்.

"நான் அமைச்சர் என்பதைக் கடந்து ஒரு தாயாக எனது கடமைகளை நான் புறக்கணித்ததே இல்லை. அவற்றை நிறைவேற்றுவதை உறுதி செய்து வந்துள்ளேன்.

நமது அன்புக்குரியவர்களுக்காக நேரம் ஒதுக்குவது மிக அவசியம், அது மிகவும் முக்கியம்," என்று டத்தோ ஸுரைடா கமாருடின் மேலும் தெரிவித்துள்ளார்.

பல பெண்கள் தங்கள் வேலை, குடும்பம், இதிர பொறுப்புகளை எதிர்கொள்ள பெரிதும் போராடுவதாகவும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வலுவான ஆதரவு, அன்பு, அக்கறை தேவை என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset