நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரிய பிளாக் ஹோலின் முதல் புகைப்படம் வெளியீடு

பெர்லின்: 

நமது பால்வெளி மண்டலத்தில் காணப்படும் மாபெரும் பிளாக் ஹோலின் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரிதாக இந்தக் கருந்துளை உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக "தி அஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் லெட்டர்ஸ்' என்ற அறிவியல் இதழில் வியாழக்கிழமை வெளியான ஆய்வறிக்கையில், நமது பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியில் என்ன நடக்கிறது என்பது பற்றிய நமது புரிதலை மேம்படுத்தவும், கருந்துளைகள் எவ்வாறு அவற்றின் சுற்றுப்புறத்துடன் தொடர்பு கொள்கின்றன என்பது பற்றிய புதிய நுண்ணறிவையும் இந்தக் கண்டுபிடிப்பு வழங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ஆராய்ச்சிக் குழு இணைந்து, உலகம் முழுவதும் உள்ள வானொலி தொலைநோக்கிகளின் தரவுகளின் அடிப்படையில் இந்தக் கருந்துளையின் புகைப்படத்தை உருவாக்கியுள்ளன.

"நமது பால்வெளியில் காணப்படும் மாபெரும் கருந்துளையின் முதல் நேரடிப் படம் இதுவாகும்' என அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வானியலாளர் ஃபெர்யல் ஓசெல் வாஷிங்டனில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset