நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

இலங்கையில் அனைத்து கட்சி அரசு அமைக்க அதிபர் ஒப்புதல் மகிந்த ராஜபட்ச பதவி விலகுவாரா? இலங்கை அரசியல் ஒரு பார்வை

கொழும்பு: 

இலங்கை அரசுக்கு அதிகரித்து வரும் போராட்டங்களைத் தடுக்க, அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபட்ச ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஏதுவாக பிரதமர் பதவியிலிருந்து தனது மூத்த சகோதரர் மகிந்த ராஜபட்சவை நீக்கவும் அதிபர் கோத்தபய ராஜபட்ச உறுதியளித்ததாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார்.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அத்தியாவசிய பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன.

எனினும், பிரதமர் ராஜபட்சவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டன.

இந்நிலையில், சொந்தக் கட்சியில் உள்ள அதிருப்தி தலைவர்களுடனும், முன்னாள் அதிபர் சீறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சியின் நிர்வாகிகளுடனும் அதிபர் கோத்தபய ராஜபட்ச வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரதமர் மகிந்த ராஜபட்சவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்தச் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சிறீசேனா, "பிரதமர் மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு, அனைத்துக் கட்சிகள் அடங்கிய புதிய அமைச்சரவையுடன் கூடிய புதிய பிரதமரை தேர்வு செய்ய தேசிய கவுன்சில் அமைக்கப்படும் என கோத்தபய ராஜபட்ச உறுதி அளித்துள்ளார்' என்றார்.

பிரதமரை நீக்கம் செய்வது தொடர்பாக அதிபரிடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை என்று பிரதமர் மகிந்த ராஜபட்சவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சிறீசேனாவுடனான சந்திப்புக்கு பிறகு ஆளும் பொதுஜன பெரமுனா கட்சியின் அதிருப்தி தலைவர்களை அழைத்து கோத்தபய ராஜபட்ச ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்காலிக அரசு அமைக்க பலத்தை நிரூபிக்க எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியதாகவும் அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset