நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

படித்துப் பார், உன்னுடைய புத்தகத்தை! - ரமலான் சிந்தனைகள்

புனித ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் நுழைந்துவிட்டோம். இறுதி வேதம் திருக் குர்ஆன் இறக்கியருளப்பட்ட இரவில் அந்தப் புண்ணிய இரவைத் தேடுங்கள் என்று திருமறையும் நபி மொழியும் வழிகாட்டுகிறார்கள்.

இந்த ஆண்டு இருப்பவர்கள், அடுத்த ஆண்டு இருப்போமா என்று இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது.

ஒவ்வொரு நாளும் பொழுது புலரும்போதெல்லாம் வாழ்க்கை எனும் புத்தகத்தின் தாள் ஒன்று புரட்டப்பட்டு விடுகின்றது.

புரட்டப்பட்டு விடுகின்ற தாள்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே போகின்றது.

புத்தகத்தில் புரட்டப்படாமல் எஞ்சியிருக்கின்ற தாள்களின் எண்ணிக்கையோ நாள்தோறும் குறைந்து கொண்டே போகின்றது.

இறுதியில் ஒரு நாள் பொழுது புலரும்போது நாம் நம்முடைய வாழ்க்கையின் கடைசி தாளைப் புரட்டிக் கொண்டிருப்போம்.

அந்த நாளில் இந்த புத்தகம் மூடப்பட்டு விடும். நம்மால் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தின் முகப்பில் நம்முடைய பெயர் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு விடும்.

நம்மால் எழுதப்படுகின்ற இந்தப் புத்தகம் தயாராகிக்கொண்டிருக்கின்றது என்கிற உணர்வு கூட நமக்கு இருப்பதில்லை.

இந்தப் புத்தகத்தை எழுதுவதில் வேறு எவருமே நமக்குத் துணையாக இருக்க மாட்டார்கள்.

முழுக்க முழுக்க நாம் மட்டுமே தன்னந்தனியாக எழுதிய புத்தகம் இது.

நாள்தோறும் நாம் செய்கின்ற அறங்கள், பாவங்கள், சேவைகள்,வழிபாடுகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் அந்தப் புத்தகத்தில் பதியப்படுகின்றன. செய்தவற்றைப் பற்றிய விவரமும் இருக்கும். எந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டது என்பது பற்றிய குறிப்பும் இருக்கும். 

நாளை மறுமையில் இந்தப் புத்தகம்தான் நம்முடைய கையில் இருக்கும்.

நம்முடைய அதிபதி நம்மைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருப்பான்:

‘படித்துப் பார், உன்னுடைய இந்தப் புத்தகத்தை! இன்று உன்னுடைய வினைப்பட்டியலைப் பரிசீலிக்க நீயே போதுமானவன்!’

(திருக்குர்ஆன் அத்தியாயம் 17 பனூ இஸ்ராயீல் 14)

தொடர்புடைய செய்திகள்

+ - reset