செய்திகள் தமிழ் தொடர்புகள்
மோடியை கலாய்த்து சிறுவர் நகைச்சுவை நாடகம் அரங்கேற்றிய தொலைக்காட்சி: கோபமடைந்த அண்ணாமலை
சென்னை:
தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி நாடக நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்தநிலையில், நேற்று பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று Zee தொலைக்காட்சியில் அரங்கேறியது. அது குழந்தைகள் நகைச்சுவை நிகழ்ச்சியாகும்.
அந்த நிகழ்ச்சியில் புலிகேசி மன்னர் போன்ற வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் சிறப்பாக நடித்திருந்தனர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகை ஸ்னேகா கலந்து கொண்டார்.
அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் அரசியல் நடவடிக்கைகளை வெளுத்து வாங்கி இருந்தார்கள்.
மோடியின் கருப்பு பண நடவடிக்கை, லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது, உள்ளூர் பிரச்சினைகளை கவனிக்காமல் பிரதமர் உலகம் சுற்றுவது, வகைக்கொரு உடுப்போடு படம் எடுத்துக் கொள்வது, விவசாயப் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் இருந்தது... உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து நகைச்சுவையாக வசனங்களை பேசியிருந்தனர். பார்த்தவர்கள் அனைவரும் வயிறு குலுங்க சிரித்தார்கள்.
இந்தக் காட்சிகள் நேற்றிலிருந்து இணையத்தில் வைரலானது. நெட்டிசன்கள் இந்த வீடியோவை பரவலாக பகிர்ந்து ட்ரெண்ட் செய்தனர்.
இந்தநிலையில், கோபமடைந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என்னைத் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பிரதமரின் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 12:25 pm
தமிழகத்தில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது
March 27, 2024, 10:58 am
ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.கள் போட்டி: குழப்பத்தில் வாக்காளர்கள்
March 24, 2024, 5:31 pm
6 மாநிலங்களில் விசிக போட்டி: தொல் திருமாவளவன் அறிவிப்பு
March 24, 2024, 9:30 am
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
March 23, 2024, 11:49 am
2ஜி வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பிறகு மேல் முறையீடு செய்ய சிபிஐக்கு அனுமதி
March 21, 2024, 2:52 pm
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
March 20, 2024, 10:37 pm
அதிமுக கூட்டணியில் தேமுதிக; 5 தொகுதிகள் ஒதுக்கீடு
March 20, 2024, 2:16 pm