நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூத்த குடிமக்களின் நலனுக்காக ஆண்டுதோறும் 900 மில்லியன் செலவிடப்படுகிறது:  சித்தி ஜைலா முஹம்மது யூசுஃப்

கோலாலம்பூர்:

மூத்த குடிமக்களை மக்களின் நலனுக்காகவும் அவர்களைக் கவனித்துக்கொள்ளவும் அரசாங்கம் ஆண்டுதோறும் 900 மில்லியன் ரிங்கிட் செலவிடுவதாக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சர் டத்தோ சித்தி ஜைலா முஹம்மது யூசுஃப் (Siti Zailah Mohd Yusoff) தெரிவித்துள்ளார்.

தமது அமைச்சின் கீழ் செயல்படும் 15 மையங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்காக இத்தொகை செலவிடப்படுவதாக அவர் கூறினார்.

"மொத்த தொகையில் 40 மில்லியன் ரிங்கிட் நல்வாழ்வுத்துறையின் மூலம் அந்த மையங்களை நிர்வகிக்கும் செலவுகளுக்காக அளிக்கப்படுகிறது. அம்மையங்களில் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் தலா 1,400 ரிங்கிட் அவர்களின் உணவு, உடை, மருந்துகள் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளுக்காக செலவிடப்படுகிறது.

KL's 'living library' bridges gap between youths, pensioners

"இதற்கிடையே, மாதந்தோறும் 70 மில்லியன் ரிங்கிட் என்ற அடிப்படையில், ஆண்டுதோறும் நாட்டில் உள்ள 138,000 மூத்த குடிமக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளுக்காகச் செலவிடப்படுகிறது.

"இந்நிலையில், நிதி ஒதுக்கீடு அதிகமாகி இருப்பதற்கு உணவு மற்றும் அன்றாடத் தேவைகளுக்கான பொருள்களின் விலை அதிகரித்ததும் ஒரு காரணமாகும். வளர்ந்து ஆளாகிவிட்ட குழந்தைகள் பெற்றோரைப் பாதுகாப்பது எந்தளவு முக்கியம் என்பதையும், அது தங்களின் கடமை என்பதையும் உணரும் பட்சத்தில் மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையங்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறையும்.

"எனவே, அத்தகைய மையங்களுக்கு பெற்றோரை அனுப்புவது பிள்ளைகளுக்கான கடைசி தேர்வாக இருக்க வேண்டும்," என துணை அமைச்சர் சித்தி ஜைலா முஹம்மது யூசுஃப் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset