நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்தியா-சீனா இடையே மோதலிலும் 125 பில்லியன் டாலர் வர்த்தகம்

பெய்ஜிங்:

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா - சீனா இடையேயான மோதல் நிலை கடுமையாக தொடர்ந்தாலும், கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே இதுவரை இல்லாத அளவுக்கு 125 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "2021இல் சீனா - இந்தியா இடையே 125.66 பில்லியன் டாலருக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. 2020 ஒப்பிடுகையில் இது 43.3 சதவீதம் அதிகமாகும்.  

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான ஏற்றுமதி 97.52 பில்லியனாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 46.2% அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இருந்து சீனாவுக்கான ஏற்றுமதி 28.14 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 34.2% வளர்ச்சி கண்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து, மருத்துவ பொருள்கள் சீனாவில் இருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இதுதான் இந்தியா - சீனா இடையேயான வர்த்தகம் 100 பில்லியன் டாலரை தாண்டியதற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset