நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரள பேராயர் பிராங்கோ முளக்கலை விடுவித்தது நீதிமன்றம்: மேல் முறையீடு செய்ய போலீஸ் திட்டம்

கோட்டயம்:

கன்னியாஸ்திரி தொடுத்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து பேராயர் பிராங்கோ முளக்கலை விடுவித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய கேரள போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

கோட்டயத்தில் உள்ள தேவாலயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், பிராங்கோ முளக்கலுக்கு எதிராக கடந்த 2018இல் காவல் துறையில் புகார் கொடுத்தார்.

அதில், கடந்த 2014இல் இருந்து 2016 வரையிலான காலகட்டத்தில், ஜலந்தர் பேராயராக இருந்த பிராங்கோ முளக்கல் கோட்டயத்துக்கு வந்த சமயங்களில் தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் அந்தப் பெண் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரை விசாரித்த சிறப்பு விசாரணைக் குழு பிராங்கோவை கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்தது.

இந்த வழக்கில் கோட்டயம் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம்,பேராயர் பிராங்கோ முளக்கலை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்களை அரசு தரப்புத் தாக்கல் செய்யாததால் பேராயரை விடுவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது ஏற்றுக் கொள்ள முடியாத தீர்ப்பு என்று சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவரும் காவல் துறை மூத்த அதிகாரியுமான எஸ்.ஹரிசங்கர் கூறியுள்ளார்.

பாதிரியார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset