நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்துக்கான பணிகள் மீண்டும் தொடங்கின: லைக்கா நிறுவனம் அறிவிப்பு 

சென்னை:

வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்துக்கான பணிகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன என்று தயாரிப்பு நிறுவனமான லைக்கா டிவிட்டர் பதிவிட்டுள்ளது.

லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்து வருகிறார். 

இப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் முக்கியக் காட்சிகளின் படப்பிடிப்புக்காக, ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டன் சென்று  திரும்பியது.

அப்போது லண்டனிலிருந்து சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு வடிவேலு கொரோனாத் தொற்று  குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில் தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் முதற்கட்ட பணிகள் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. தற்போது படக்குழு மீண்டும் லண்டன் சென்றுள்ளது. 

இவர்களுடன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் லண்டன் சென்று அங்கு படத்துக்கான பாடல்கள் மற்றும் பின்னணி இசைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இப் படத்தில் ஒரு பாடலை வடிவேலு பாடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset