நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பிரான்சில் வேகமெடுக்கும் தொற்றுப்பரவல்; ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு 

பாரிஸ்:

பிரான்ஸில் கோவிட் -19 நோய்த்தொற்றின் தீவிரம் குறையவில்லை. கடந்த 24 மணி நேர இடைவெளியில் அந்நாட்டில் புதிதாக 305,000-க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று பிரான்ஸில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 370,000-க்கும் அதிகமானோருக்குப் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது. 

அந்நாட்டில் கடந்த 7 நாள்களில் சராசரியாக  நாள் ஒன்று புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை சுமார் 294,000 ஆக அதிகரித்துள்ளது. 

French COVID-19 Cases Fall As AstraZeneca Inoculations Start

இந்நிலையில் பிரான்ஸ், பிரிட்டிஷ் நாட்டுப் பயணிகளுக்கு விதித்த தடைகளை நீக்கியுள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் நோய்த்தொற்று இல்லை என்ற சான்றிதழ்களைச் சமர்பித்துவிட்டால் பிரான்ஸுக்குள் நுழைய அனுமதிப்படுவார்கள் என்று அந்த நாட்டு குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. 

ஓமிக்ரான் கிருமிப்பரவல் காரணமாக பிரான்ஸ் தன் நாட்டு குடிமக்களுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு  கடந்த மாதம் 16ஆம் தேதி அறிவித்திருந்தது. 

தொடர்புடைய செய்திகள்

+ - reset