நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

10 மாநிலங்களுக்கு வானிலை எச்சரிக்கை: மாலை 6 மணி வரை இடியுடன் கனமழை, பலத்த காற்று எதிர்ப்பார்க்கப்படுகின்றன

கோலாலம்பூர்: 

நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு, மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை, பலத்த காற்று வீசக்கூடும் என அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை முழு பினாங்கு மாநிலத்தையும் உள்ளடக்கியுள்ளதுடன், கெடா மாநிலத்தின் யான், பெண்டாங், கோலா மூடா, சிக், பாலிங், கூலிம், பண்டார் பாரு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், பேராக் மாநிலத்தின் கேரியான், லாருட், மாத்தாங், செலாமா பகுதிகளும் எச்சரிக்கை பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

திரெங்கானு மாநிலத்தில் பெசுட், செத்தியூ, கோலா நெருஸ், கோலா திரெங்கானு, துங்குன், கெமாமான் பகுதிகளிலும், பஹாங் மாநிலத்தின் ராவுப், பெந்தோங், குவாந்தான் பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், சிலாங்கூர் மாநிலத்தின் கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கோலா லங்காட், உலு லங்காட், செப்பாங் பகுதிகளும் எச்சரிக்கையின் கீழ் உள்ளன.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஜெலெபு, சிரம்பான், கோலா பிலா, ஜெம்போல் பகுதிகளிலும், ஜொகூர் மாநிலத்தின் பொந்தியான், குலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு பகுதிகளிலும் மோசமான வானிலை நிலை நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சரவாக் மாநிலத்தின் மீரி பிரிவில் சுபிஸ், மீரி, மருடி பகுதிகளும், சபா மாநிலத்தில் பியூஃபோர்ட், தம்புனான், மேற்கு கடற்கரைப் பகுதி, பெலுரான், கோத்தா மாருடு பகுதிகளும் பாதிக்கப்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset