நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாஸ் அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததில் பெர்சத்து கட்சிக்கு பெரும் ஏமாற்றம்: டான்ஸ்ரீ மொஹைதின்

கோலாலம்பூர்:

பாஸ் அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டு வந்ததில் பெர்சத்து கட்சிக்கு பெரும்  ஏமாற்றத்தை அளிக்கிறது.

பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் இதனை கூறினார்.

இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவரும் பாஸ் கட்சியின் முடிவுக்கு பெர்சத்து தனது வருத்தத்தை வெளிப்படுத்துகிறது.

இருப்பினும் தேசியக் கூட்டணியின் ஒரு அங்கக் கட்சியாக பெர்சத்து தொடர்ந்து நீடிக்கும்.

பாஸ் கட்சியுடன் கட்டப்பட்ட ஒத்துழைப்பு உன்னத உணர்வு, புரிதலின் அடிப்படையில் அமைந்தது.

பெர்சத்து கட்சியுடனான அரசியல் ஒத்துழைப்பை நிறுத்தி, உறவுகளைத் துண்டிக்கும் முடிவு பாஸ் கட்சியின் வேண்டுகோளின் பேரில் எடுக்கப்பட்டது.

தேசியக் கூட்டணியின் ஸ்தாபகக் கட்சிகளில் ஒன்றாக, பெர்சாட்டு பிஎன்-இல் தொடர்ந்து நீடித்து, அதன் போராட்டத்தின் மையத்தை வலுப்படுத்தும் என்று அவர் சற்று நேரத்திற்கு முன்பு ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset