நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேராக்கில் இந்திய முஸ்லிம் சமூகம் ஓரங்கப்படுவதாக பரவும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்: டத்தோ சிவநேசன்

ஈப்போ:

பேராக்கில் இந்திய முஸ்லிம் சமூகம் ஓரங்கப்படுவதாக பரவும் தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்.

பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் இதனை வலியுறுத்தினார்.

இந்திய முஸ்லிம் சமுகத்தினர்களுடன்  இன்று சிறப்பு சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் பல இந்திய முஸ்லிம் சமுக இயக்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கருத்துகளை பறிமாறிக் கொண்டேன்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய முஸ்லிம் சமுகத்தினர்களின் தேவைகளுக்கு உதவிகள் வழங்கப்படும்.

அவர்கள் ஓரங்கப்படுவதாக சிலர் பரப்பி வரும் தவறாக தகல்களை யாரும் நம்ப வேண்டாம்.

அவர்களின் சமய விவகாரங்களுக்குள் என்னால் தலையிட முடியாது.

மற்றபடி சமுக நல விவகாரங்களில் தலையிட்டு தேவைகளுக்கு உதவிகள் வழங்க தாம் தயாராக உள்ளதாக அவர் கூறினார்.

அவர்கள சமய நடவடிக்கைகளுக்கு முன் வைக்கும் நிதி கோரிக்கைகளுக்கு தலையிட முடியாது. அதற்கு முஸ்லிம் சமய விவகாரங்களுக்காக அதிகாரிகள் உள்ளனர் என்றார்.

இந்திய முஸ்லிம் சமய அமைப்புகள் இன ஒற்றுமையை பிரதிபலிக்கும் நிகழ்வுகளை நடத்தினால் ஒற்றுமை துறை அமைச்சின் நிதி உதவிகளை பெறலாம்.

அதே சமயத்தில் முஸ்லிம் சகோதர்கள் வழி நடத்தி வரும் அரசு சாரா இயக்கங்களுக்கு நிதி உதவி வழங்க தயாராக உள்ளதாகவும் அதற்கு முறையான விண்ணபங்கள் செய்தால் பரிசிலிக்கப்படும் என்றார்.

பல இனம் சமயத்தவர்கள் வாழும் இந்த நாட்டில் இனவேறுபாடின்றி உதவிகளை நடப்பு அரசாங்கம் செய்து வருகிறது.

ஒரு சிலர் மதங்களை காரணம் காட்டி இந்திய முஸ்லிம் சமுகத்தினர்களை தாம் ஒரங்கட்டி வருவதாக சிலர் தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருவதை கடுமையாக சாடினார்.

நான் ஒரு இந்துவாக இருந்தாலும் முஸ்லிம் சமுக மக்களுக்கு என்றும் தோழனாகவே இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset